கம்பஹாவிலிருந்து யாழ் வருகை தந்த 09 மாணவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை..!!

0

கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாட்களில் வருகை தந்த 9மாணவர்களின், மாதிரிகள் பெறப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.கம்பஹா- மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த 9 மாணவர்கள், அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் நேற்று பெறப்பட்டு பி.சி.ஆர்.பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அவர்களின் பி.சி.ஆர்.பரிசோதனை அறிக்கை, நாளை (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெறும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.