பிரான்ஸை உலுக்கிய கொடூரக் கொலை! பரிசோதனைகளில் வெளியான அதிர்ச்சி தகவல்

0

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட ஐந்து பேரை கோரமாகக் கொலை செய்த இலங்கைத் தழிழர் சுய நினைவுடனேயே இந்தச் செயலைச் செய்திருக்கின்றார் என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களை அதிர வைத்த இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் அந்நாட்டு ஊடகங்கள் மூலம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதன்படி பாரிஸ் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கொலைச் சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை பாரிஸிலுள்ள தன்னுடைய வீட்டில் வைத்து மனைவி, இரண்டு பிள்ளைகள், இரண்டு மருமக்கள் ஆகியோரை கோரமாகக் கொலை செய்திருந்தார்.

அதனைவிட நெருங்கிய உறவினர்களான சகோதரி, மைத்துனர், அவர்களுடைய இரு பிள்ளைகள் என மேலும் நால்வரை அவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கியிருந்தார்.

கடும் காயங்களுடன் தப்பிச் சென்ற சிறுவன் ஒருவன் கொடுத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறை நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

கொலைச் சந்தேக நபரும் தன்னைத்தானே தாக்கியதில் படுகாயமடைந்திருந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் மன நலம் குறைந்தவர்களுக்கான மருத்துவமனைக்கு இப்போது மாற்றப்பட்டுள்ளார்.

ஐந்து கொலைகளை இவர் எதற்காகச் செய்தார் என்பதற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் கொலை செய்யும் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மதுப்பழக்கங்கள் இவருக்கு இருக்கவில்லை என்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.