ஓ.டி.டி. தளங்கள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யாபாலன்

0

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ஓ.டி.டி. தளங்கள் மீது எனக்கு ஈடுபாடு உண்டு. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும்.

புதிய படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காதவர்களுக்கு ஓ.டி.டி. தளங்கள் கைகொடுக்கும். நான் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். உரிய நேரத்தில் அதை செய்வேன்” என்றார்.

கொரோனாவால் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாரான புதிய படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சூர்யாவின் சூரரை போற்று விஜய்சேதுபதியின் க.ஃபெ. ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத்தே உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க

Leave A Reply

Your email address will not be published.