கல்வியமைச்சர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது

0

சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதன் விளைவாக கல்வி அமைச்சரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் சுய தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த சோதனையின் முடிவிலேயே அமைச்சர், அவரது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.