ஆர்ஜென்டீனாவின் முன்னாள் கால்பந்து வீரர் லூக் காலமானார்

0

ஆர்ஜென்டீனாவின் முன்னாள் கால்பந்து வீரர் லியோபோல்டோ ஜசிண்டோ லூக் தனது 71 ஆவது வயதில் திங்கட்கிழமை காலமானார் என்று ஆர்ஜென்டீனாவின் கால்பந்து அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஆர்ஜென்டீனா கால்பந்து சங்கம் (AFA) லூக்கின் மரணத்தை உறுதிசெய்தது. அதன் இணையதளத்தில் ஒரு அறிக்கையில் அவர் காலமானதற்கு வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், அவரது உறவினர்களுக்கும் அன்பானவர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளது.

லூக் இருதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக ஆர்ஜென்டீனாவின் தேசிய செய்தி நிறுவனமான டெலாம் குறிப்பிட்டது.

லூக் 1978 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்ல தனது சொந்த அணியான ஆர்ஜென்டீனாவுக்கு உதவினார்.

அவர் தேசிய அணிக்காக 45 போட்டிகளில் ஆடி 22 கோல்களை அடித்தார்.

தனது கிளப் வாழ்க்கையில், லூக் ரிவர் பிளேட்டுடன் ஐந்து ஆர்ஜென்டீனா லீக் பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.