தடுப்பூசியை பெற மறுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள்

0

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சில எம்.பி.க்கள் தடுப்பூசியை பெறுவதற்கு மறுத்துவிட்டனர்.

தடுப்பூசி செலுத்தும் திட்டம் பொது மக்களுக்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் கொவிட்டினால் அதிகளவாக பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு தடுப்பூசியை பெறுவதற்கு மறுத்துவிட்டனர்.

அதன்படி ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ஹேஷ விதானகே மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய எம்.பிக்களே இவ்வாறு தடுப்பூசியை பெற மறுத்தவர்கள் ஆவர்.

எவ்வாறெனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க, திலிப் வேதாராச்சி மற்றும் மயந்த திஸாநாயக்க ஆகியோர் தடுப்பூசியை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.