பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

0

பிரித்தானியாவில் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் மற்றொரு புதிய மாறுபாட்டை சில சிக்கலான மரபணுப் பிறழ்வுகளுடன் அடையாளம் கண்டுள்ளனர்.

இது  தென்னாப்பிரிக்காவில் பரவும்  B.1.525 பரம்பரை ஒத்ததாக இருப்பதால், வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக பரிசோதனைகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுவரை 38 தொற்றாளர்களை கண்டுபிடித்துள்ளனர். அதில் டிசம்பர் மாத மாதிரிகளில் இருந்து வேல்ஸில் 2 பேரும் மற்றும் இங்கிலாந்தில் 36 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

டென்மார்க், நைஜீரியா, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிலும் இe்த வைரஸ் காணப்படுகிறதாம்.

இது என்ன ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள பிரித்தானிய நிபுணர்கள் இதைப் ஆய்வு செய்து வருகின்றனர்.

புதிய மற்றும் வளர்ந்து வரும் வைரஸ் அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகளில் ஒருவரான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா, 

B.1.525 ஏற்கனவே சில புதிய வகைகளில் காணப்பட்ட “குறிப்பிடத்தக்க மரபணுப் பிறழ்வுகள்” இருப்பதாக தெரிவித்துள்ளார். இது ஓரளவு உறுதியளிக்கிறது, ஏனென்றால் அவற்றின் விளைவு என்ன என்பதை நாம் கணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

பப்ளிக் ஹெல்த் பிரித்தானிய பொது சுகாதார நிறுவனத்தின் பேராசிரியர் யுவோன் டாய்ல் தெரிவித்துள்ளதாவது,

 “வளர்ந்து வரும் மாறுபாடுகள் பற்றிய தரவுகளை பிரித்தானிய பொது சுகாதார நிறுவனம் மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறது, மேலும் அதிகளவான பரிசோதனைகள் மற்றும் மேம்பட்ட தொடர்பு தடமறிதல் போன்ற தேவையான பொது சுகாதார தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“இந்த மரபணுப் பிறழ்வுகள் மிகவும் கடுமையான நோய் அல்லது அதிகரித்த பரவுதலை ஏற்படுத்துகின்றன என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.