விசா சிக்கலால் தசூன் ஷானக்கவுக்கு ஏற்பட்ட நிலை

0

மேற்கிந்தியத்தீவுகளுடனான ‘வைய்ட் போல்’ கிரிக்கெட் தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள தசூன் ஷானக்க, ஏனைய இலங்கை அணி வீரர்களுடன் மேற்கிந்தியத்தீவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவில்லை என்பதை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

முத்தரப்பு தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணியானது இன்று அதிகாலை 3.35 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் -669 என்ற விமானத்தில் புறப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தின் மூலமாக கட்டாரின் தோஹாவைச் சென்றடையும் இலங்கை அணியானது, அங்கிருந்து மற்றொரு விமானத்தினூடாக மேற்கிந்தியத்தீவுகளை சென்றடையும்.

இந் நிலையில் இந்த இலங்கை அணி வீரர்கள் குழுவில் தசூன் சானக்க பயணம் மேற்கொள்ளவில்லை என்பதை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஒரு அறிக்கையினுடாக உறுதிப்படுத்தியுள்ளது.

தசூன் ஷானக்க தனது கடவுச்சீட்டை தவறவிட்டதன் காரணமாக விசா வழங்குவதில் எழுந்த சிக்கல் நிலைமை காரணமாகவே அவர் ஏனைய வீரர்களுடன் இணைந்து பயணிக்கவில்லை.

இதேவேளை இலங்கை கிரிக்கெட், ஷானகாவின் விசா பிரச்சினையை விரைவில் நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது.

பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததும் அவர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஏனைய வீரர்களுடன் அணியில் இணைந்து கொள்வார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடருக்கான இலங்கை டி-20 அணியின் தலைவராக தசூன் ஷானகா நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.