அஸ்ராஜெனேகாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் முக்கிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
அஸ்ரா ஜெனேகாவின் தடுப்பூசியை பயன்படுத்துவதை உலக நாடுகள் சில இடைநிறுத்தியுள்ளமை குறித்து ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசியை பெற்ற சிலர் குருதி உறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே தடுப்பூசியை தடை செய்ய காரணம் எனவும் ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் ஆலோசனை குழுவின் பேச்சாளர் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசி மிகச்சிறந்ததென்பதோடு, அஸ்டிராஜெனேகா தடுப்புமருந்தினை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அஸ்டிராஜெனேகாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து அவுஸ்திரேலியாவின் சுகாதார அதிரிகள் கரிசனை எதனையும் வெளியிடவில்லை என பிரதமர் ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
இந்த விவகாரம் குறித்து சுகாதார திணைக்களத்தின் செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளததாக தெரிவித்துள்ள பிரதமர் அவுஸ்திரேலியாவில் அஸ்டிரா ஜெனேகாவை பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.