ஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்

0

மேற்கு ஈராக்கில் புதன்கிழமை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் நடத்தும் ஒரு இராணுவ தளத்தை குறிவைத்து குறைந்தது 10 ராக்கெட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தொடர்பான உடனடித் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அன்பர் மாகாணத்தில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமான நிலையத்தை ஈராக் நேரப்படி புதன்கிழமை காலை 7:20 மணிக்கு ராக்கெட்டுகள் தாக்கியதாக அந்நாட்டின் அமெரிக்கத் தலைமையிலான கூட்டணிப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கர்னல் வெய்ன் மரோட்டோ தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்படுத்தவில்லை என்றும் ஏவுகணைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுதளத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்ததாகவும் தாக்குதலின் பின்னர் ஈராக் இராணுவம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

கடந்த வாரம் ஈராக்-சிரியா எல்லையில் ஈரான்-சீரமைக்கப்பட்ட போராளிகளின் இலக்குகளை அமெரிக்கா தாக்கிய பின்னர் பதிவான முதல் தாக்குதல் இதுவாகும்.

வெள்ளிக்கிழமை முன்னெடுக்கவுள்ள போப் பிரான்சிஸின் ஈராக் பயணத்திற்கு முன்னதாக இந்த தாக்குதல் வந்துள்ளது, ஒரு போப் ஈராக் நாட்டிற்கு செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Leave A Reply

Your email address will not be published.