ஹரி – மேகன் எழுப்பிய பிரச்சினைகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும்!

0

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற  நேர்காணலில் ஹரி, மேகன் தம்பதிகள் அரச குடும்பத்தில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள், தங்களுக்கு பிறக்கவிருக்கும் அடுத்த குழந்தையின் பாலினம் உள்ளிட்ட பல்வேறு  விடயங்களை  மனம் திறந்து பேசினர். 

எங்கள் மகன் கறுப்பாக பிறந்து விடுவானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாக ஹரி – மேகன் தம்பதியினர் தெரிவித்தனர்.

குறிப்பாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எல்லாம் வந்தது. அதுமட்டுமின்றி கலப்பின பெண்ணான தனக்கு பிறந்ததால், தங்கள் மகன் ஆர்ச்சிக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது போன்ற பல குற்றச்சாட்டுகளை மேகன் முன் வைத்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இந்தப்பேட்டி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில்,

“கடந்த சில ஆண்டுகளாக ஹரி, மேகன் எதிர்கொண்ட சவால்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. சமீபத்திய பேட்டியில் எழுப்பப்பட்ட புகார்கள், குறிப்பாக அரச குடும்பத்தின் மீதான நிறவெறி புகார் வருத்தமளிக்கிறது.சில புகார்களின் மீது மாற்றுக் கருத்து இருந்தாலும், பொதுவெளியில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அந்த குடும்பரீதியாக தனிப்பட்ட முறையில் சீர் செய்யப்படும். ஹரி, மேகன், ஆர்ச்சி எப்போதுமே குடும்பத்துக்கு பிரியமானவர்களாக இருப்பர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.