உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

0

உலக கிறிஸ்தவர்கள் இன்று (04) இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் உயிர்த்த ஞாயிறு பண்டிகையை அல்லது பாஸ்கு பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

உலகம் கொரோனா அச்சுறுத்தலால் அவதியுறும் இன்றைய சூழலில் இயேசுவின் உயிர்ப்பு உலகத்தை மீட்பதாக அமையம் வேண்டும் என்பது அனைவரதும் பிரார்ததனையாகும்.

இன்றைக்கு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவங்களுக்காகவும், சாபங்களுக்காகவும் தனது இன்னுயிரை தியாகம் செய்தார்.

அவ்வாறு உலக பாவங்களை சுமந்து தீர்ததை கிறிஸ்தவர்கள் கடந்த பெரிய வெள்ளியன்று (02) மிகவும் பயபக்தியோடு அனுஸ்டித்தனர்.

அவ்வாறு புனித வெள்ளியை அனுஸ்டித்த கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் புளிப்பில்லா அப்ப பண்டிகை எனப்படும் பாஸ்காவை நினைவு கூறுகின்றனர்.

வாரத்தின் முதலாம் நாளான இன்று போன்றதொரு ஞாயிற்றுக்கிழமை நாளில் கிறிஸ்து இயேசுவில் அதித விசுவாசம் கொண்டிருந்த மூன்று பெண்கள் இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு சென்ற இயேசுவின் சடலத்தை தேடினார்கள்.

ஆனால் இயேசு அங்கு இருக்காதலால் மிகுந்த கலக்கம் அடைந்த அவர்கள் முன் இரண்டு தேவதூதர்கள் தோன்றி ´உயிரோடிருப்பவரை மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன´ என வினவினர்.

அத்துடன் ´அவர் இங்கே இல்லை, அவர் உயிர்தெழுந்தார், மனுஸகுமாரன் பாவிகளான மனிதர்களின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டும் என்பதாக அவர் சொன்னதை நினைவு கூருங்கள் என்றார்.

அவர் சொன்னதை அந்த மூன்று பெண்களும் விசுவாசித்து அதை சிடர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறித்தார்கள்.

அதனையே கிறிஸ்தவர்கள் இன்றும் விசுவாசித்து இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.