சிம்ரனுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரசாந்த்

0

அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடித்து வரும் பிரசாந்த், தனது பிறந்தநாளை சிம்ரனுடன் கொண்டாடி இருக்கிறார்.சிம்ரனுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரசாந்த்தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் பிரசாந்த். இவர் தற்போது அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது. பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இப்படத்தை இயக்குகிறார்.

இதில் பிரசாந்த்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரகனி, யோகிபாபு, பிரியா ஆனந்த், வனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அந்தகன் படக்குழுவினர்

இந்நிலையில், நடிகர் பிரசாந்த் தனது பிறந்தநாளை அந்தகன் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இதில் நடிகை சிம்ரன், வனிதா, சமுத்திரகனி, மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.