விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படப்பிடிப்பு நிறைவு

0

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகி வரும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அறிமுக இயக்குனர் கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘ஓ மை கடவுளே’ பட புகழ் நடிகை வாணி போஜன் நடிக்கிறார். இவர்களுடன் தனஞ்ஜெயா, தம்பி ராமையா பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்திற்கு மஹதி ஸ்வர சாகர் இசை அமைக்கிறார். இவர் பிரபல இசை அமைப்பாளரான மணி சர்மாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாத் தொற்று பரவல் அச்சம் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தற்காப்பு விதிகளுடன் மீண்டும் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

‘புலிகுத்தி பாண்டி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகிவரும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.