இலங்கை கொரோனா நெருக்கடிக்கு யார் காரணம்?

0

முன்னொரு போதும் இல்லாதளவுக்கு நாடு இப்போது பாரிய சுகாதாரநெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலைமை இயற்கையாக உருவாகிய ஒன்று எனக் கூறுவதை விட,உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே பொருத்தமானது.

இப்போது கொரோனா தொற்று பரவல் மோசமடைந்திருப்பது மாத்திரமே, நாட்டில்பிரச்சினைக்குரிய விடயம் அல்ல. தடுப்பூசி செலுத்துவது மற்றும் அதற்கானஒழுங்கமைப்புகளும் பிரச்சினையாக உள்ளன. சரியான சுகாதார வழிகாட்டல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும்நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன.  இது ஒரு பலமுனைநெருக்கடி. 

சரியான திட்டமிடல், வழிநடத்தல் குறைபாடுகளால் ஏற்பட்டிருக்கின்றபிரச்சினை என்பதில் சந்தேகம் இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பொறிமுறை கடந்த ஒரு வருடத்துக்குமேலாக செயற்படுகின்ற நிலையிலும், அதிலுள்ள தவறுகள், குறைபாடுகளைக் கண்டறிந்து,திருத்தங்களைச் செய்யும் வாய்ப்பு இருந்த போதும், இலங்கை அரசாங்கம் அதனைச் செயற்படுத்தவில்லை.

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பாரியளவில் தொற்றுப் பரவல் ஏற்படும்என்றும், நாட்டை முடக்குமாறும் சுகாதார அதிகாரிகள்,  நிபுணர்கள் கோரிக்கைவிடுத்தனர். குறைந்தபட்சம் பயணத் தடையையாவது விதியுங்கள் என்று கேட்டனர். அதற்குஅரசாங்கம் செவிசாய்க்கவேயில்லை. 

மேற்குலக நாடுகளைப் போல நாட்டை முடக்க முடியாது, ஊரடங்கு விதிக்கமுடியாது, என்று கூறியது அரசாங்கம். அரசாங்கத்தின் பிடிவாதப் போக்கினால் தான், இந்த நெருக்கடி ஏற்பட்டது.கடைசியில் வெள்ளம் தலைக்கு மேல் போனதும், சுகாதார அதிகாரிகள்தங்களிடம் ஆலோசனையை கூறவில்லை, ஊடகங்களிடம் பேசுகின்றனர் என்று அவர்களின் வாயைஅடைத்து விட்டது.

போர் குறித்து மார்தட்டும் ஸ்ரீலங்கா, இன்னமும் அதனை பெருமைப்படுவதையும் புலிகளுடன் கொரோனாவை ஒப்பிடுகின்ற செயற்பாடும் நடக்கின்றது. ஆனால் இன்றைக்கு கொரோனா இந்தியா போன்ற நாட்டின் பாதிப்புக்கு சமமான பாதிப்பை சந்திக்கின்றது. உயிரிழப்பு அப்படியே இருக்கிறது. இதற்கு முழுப் பொறுப்பை இன்றைய அதிபர் கோத்தபாய பெறுப்பெடுக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.