யேமன் இராணுவ தளத்தின் மீது ஹவுத்தியினர் தாக்குதல் ; 30 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

0

யேமனின் சவுதி தலைமையிலான கூட்டணியின் படைகளுக்குச் சொந்தமான இராணுவத் தளத்தின் மீது ஹவுத்தி படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 30 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர் என யேமனின் தெற்குப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு மாகாணமான லாஹிஜில் உள்ள அல்-அனாத் இராணுவத் தளத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் ஆயுதமேந்திய ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது என்று முகமது அல்-நக்கீப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு ஹவுதி குழு இன்னும் பதலளிகவில்லை.

ஏமன் அரசுப் படைகளுக்கும், ஷியா ஹவுதி இயக்கத்துக்கும் இடையே கடந்த 6 வருடங்களாக உள்நாட்டு மோதலால் யேமன் அடிக்கடி தாக்குதலுக்கு முகங்கொடுத்து வருகிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக 2015 முதல் அங்கு சவுதி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் தரப்பில் கிளர்ச்சியாளர்களுடன் மோதலில் ஈடுபடுகிறது.

Leave A Reply

Your email address will not be published.