ஓய்வுபெற்ற சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன் விபத்தில் பலி

0

டேனிஷ் முன்னாள் தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன், தனது 37 ஆவது வயதில் சனிக்கிழமை காலமானார்.

பெல்ஜியத்தில் அவர் சைக்கிள் சவாரி செய்யும் போது எதிரே வந்த வாகனம் ஒன்றுடன் மோதியே உயிரிழந்துள்ளதாக சர்வதேச சைக்கிள் ஓட்டுதல் சங்கம் (UCI) தெரிவித்துள்ளது.

டேனிஷ் ஒளிபரப்பாளருடன் சேர்ந்து இந்த வார இறுதியில் பெல்ஜியத்தின் ஃபிளாண்டர்ஸில் நடந்த சாலை உலக சாம்பியன்ஷிப்பிற்கான வர்ணனையில் அவர் பணியாற்றினார்.

சொரென்சன் 2018 இல் தொழில்முறை சைக்கிள் ஓட்டுதலில் இருந்து ஓய்வு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.