டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கிய பூர்ணா

0

நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்ற நடிகை பூர்ணா, போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, கந்தக்கோட்டை, தகராறு, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 

சமீபத்தில் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். இதுதவிர ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் பூர்ணா.

பூர்ணா

அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் நன்றாக நடனமாடிய ஒரு இளைஞருக்கு முத்தம் கொடுத்த பூர்ணா, அவரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவின. ஒரு நடுவர் செய்யும் வேலையா இது என்று நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.