சென்னையை மூன்று விக் கெட்டுகளினால் வீழ்த்திய டெல்லி

0

சென்னை அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மூன்று விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

2021 ஐ.பி.எல். தொடரின் 50 ஆவது லீக் போட்டி நேற்றிரவு டுபாயில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரிஷாட் பந்த் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு சென்னை அணியை பணித்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் அதிகபடியாக அம்பத்தி ராயிடு 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

137 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை குவித்து வெற்றியிலக்கை கடந்தது.

அணி சார்பில் அதிகபடியாக ஷிகர் தவான் 39 ஓட்டங்களையும், சிம்ரன் ஹெட்மேயர் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதேவ‍ேளை இன்றிரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் ஆரம்பமாகும் 51 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தின் வெற்றியானது பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பினை இரு அணிகளுக்கும் வழங்கும்.

Photo Credit ; IPL

Leave A Reply

Your email address will not be published.