பிரபாஸ் பிறந்தநாளுக்கு படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு

0

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் பிரபாஸ் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசை படக்குழுவினர் கொடுத்துள்ளனர்.

பிரபாஸ் பிறந்தநாளுக்கு படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசுநடிகர் பிரபாஸின் பிறந்த நாளான இன்று, அவரது அடுத்த படமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் ராதே ஷியாமின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரம் ஆதித்யா குறித்த சிறப்பு டீசராக இது அமைந்துள்ளது. 

ராதே ஷியாம் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை இதுவரை உருவாக்கியிருந்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியிடப்பட்டுள்ள டீசர் அவர்களை இன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

விடுகதை பாணியில் அமைந்துள்ள இந்த டீசர், பிரபாஸ் ஏற்றுள்ள கதாபாத்திரமான கைரேகை நிபுணர் குறித்த ரகசியங்களை தனக்கே உரிய பாணியில் விறுவிறுப்பான முறையில் வெளியிடுகிறது. முதல் முறையாக இத்தகைய வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபாஸ்

சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளன்றும் ஒரு சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது. ஜனவரி 14, 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது ராதே ஷியாம்.  

Leave A Reply

Your email address will not be published.