காத்திருப்போர் பட்டியல் | கேசுதன் கவிதை

0

அணையா விளக்கு முன் கலங்கிய நெஞ்சமுடன்
வீதியோர கொட்டகைகள்
போராடும் பொழுதுகளுடன் மாரடித்து கதறும்
மாதர் கூட்டம்
விடியா நினைவுகளும் விழிநீர் சிந்தும் மாதங்களுடன்
கறை படியா செல்களை துளைத்து செந்தமிழ்
முரசொலி முழங்க தெருவெங்கும்
நடை பயணம்அலறவிடும் அரசாங்கம் அடைந்தது ஒன்றுமில்லை
உயிருள்ள குழந்தைக்கு
கள்ளிபால் கொடுத்து கொல்லும்
கயவர் கூட்டம்

அடைகாத்த குஞ்சுகளை அரை உயிருடன்
கெளவ்வி சென்ற கருடனவன்
காட்டினான் கடைசியில்
மரண பட்டயம்
வானுலகம் அதிரும்படி ஓலமிட்ட உயிர்கள்
உலகமே மிரளும் மீண்டெழும்
துயர் கண்டு

ஒளிரும் விளக்கும் அணைய முதல்
செல்வங்களை சேரபல்லாயிரம் உயிர்கள் காத்திருப்போர் பட்டியலில்

அணையா தீபமாய் வீதிகளில்…

கேசுதன் 


Leave A Reply

Your email address will not be published.