இவன் எங்கள் சாமி | த. செல்வா

0

எந்தப் புலவனின் கனவினாலும்
எழுத முடியாக் காவியம்
எந்த அகாரதியிலும் தேடமுடா
சொல் அவன்
எம் பூமிக்கோர் புனித மீன்ற
சாமி இவன்
வற்றாக் கொள்கை
வீழா வேட்கை
தொலையாக் கனவுடனே
எங்கோர் தொலைவில் இயங்கும் ஆத்மா
நெஞ்சுக்குள் வாழ்வோனை
விண்ணிலும் மண்ணிலும் தேடியென்ன
உதிரங் கனந்த பூமியில்
உறங்காக் கண்மணியாய் விழித்தவன்
கண்ணில் விடுதலைத் தணல் சுமந்து வெம்பகை சாய்த்தவன்
கண்ணீரின் பூமியை தன்றன் கனவால்
மீட்டவன்
தீராத் திசையாவும் வியாபித் திருக்கும்
எதிர்பார்ப்பின் எளியனானவன்
நஞ்சை நெஞ்சில் அணியாக்கிய
உலகின் முதல் தலைவன்
விடுதலைச் சுடரில் கனந்து
எம் நெஞ்சுள் பேரொளியாய் சுடர்வான்
இது சத்தியத்தின் துல்லிய ஒப்பனை முரசறை என்று கீர்த்தி பாடுவோம்
கிலியிலாத் தலைவனை

Leave A Reply

Your email address will not be published.