கனடா வாழ் ‘நிவாரணம்’ செந்தில்குமரனின் மனித நேய மற்றும் மற்றும் மனதைக் கவரும் இசைத் துறை பங்களிப்புக்கள்

0

கனடா வாழ் செந்தில்குமரன் பல்வேறு வழிகளில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களாலும் ஏனைய இனங்கள் சார்ந்த பலராலும் நன்கு அறியப்பெற்றவராக விளங்குகின்றார் என்பதில் சந்தேகமே இல்லை.

‘நிவாரணம்’ என்னும் மனித நேய நிறுவனத்தினை நிறுவி குறிப்பாக கனடா வாழ் தமிழ் மக்கள் பேராதரவோடு இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் நோயினால் வாடும் அல்லது உயிரைப் பறிக்கும் நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றும் அவசர சத்திரசிகிச்சை செய்து .இருதயம் சார்ந்த குறைபாடுகளிலிருந்து விடுபடுவது என நூற்றுக்கணக்கானவர்களுக்கு அருகில் இருந்து உதவுவது போன்று ஓரு உதவும் கரம் போல செயற்பட்டுவருகின்றார்.இவரது இந்த மனித நேயப் பணிகளுக்கு ” நான் முந்தி. நீ முந்தி” என்று தமிழ் அன்பர்கள் தொடர்ச்சியாக நிதி அன்பளிப்புகளை வழங்குவதும்.. இந்த உதவிகள் பலரது உயிர்களை இதுவரை மீட்டெடுத்துள்ளன என்பதும் இதுவரை பதிவு செய்யப்பட்ட உறுதியான தகவல்கள் ஆகும்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஓய்வின்றி உழைத்து உயிர் காக்கும் ஒரு தூதுவனாக விளங்கும் ‘நிவாரணம்’ செந்தில் குமரன் அவர்கள் தான் உயிராக நேசிக்கும் இசைத் துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றார் என்பதும் எம்மைப் போன்ற சிலர் அறிந்துள்ள விடயமாகும்.
‘மின்னல் இசைக் குழு’ என்னும் இசைப் பிரிவை நடத்தி வரும் செந்தில் குமரன் அவர்கள் தானும் பாடி மகிழ்வதோடு மட்டுமல்லாது மின்னல் இசை நிகழ்ச்சிகள் மூலமும் நிதி சேகரித்து தனது ‘நிவாரணம்’ அமைப்பிற்கு வலுச் சேர்த்து வருகின்றார்.

அத்துடன் இசைத் துறை சார்ந்தவர்கள் வியக்கும் வண்ணம் சில பாடல்களை தேர்வு செய்து, அவற்றை காட்சிகளோடு பதிவு செய்து பிரமாண்ட மான முறையில் ஒளி ஒலி வடிவத்தில் தயாரித்து (மிகுந்த பொருட் செலவில்) இசை ரசிகர்கள் பார்த்தும் கேட்டும் ரசிக்கும் வகையில் படைத்து (Youtube)யுரியுப் வழியாக காட்சிப்படுத்தி வருகின்றார்.

இந்த வரிசையில் அண்மையில் மின்னல் இசைக் குழுவின் தயாரிப்பில் வெளியாகி உள்ள GO GO GOVINDA என்னும் பாடலை கப்பல் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஏராளமான இசை மற்றும் நடனக் கலைஞர்களோடு இணைந்து அற்புதமாக படைத்தளித்துள்ளார்.

இதன் தயாரிப்பிற்கு கனடா வாழ் இசையமைப்பாளர் பிரவின் மணி அவர்கள் இசை வழங்கியுள்ளார். இது தொடர்பான முக்கிய விடயம் என்னவென்றால் தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்களும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். டி.இமான் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில். பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

Heartly wishes to the wonderful talents in Canada. My love goes to all . Congrats
Canada’s Minnal Music Team and Dear Brother Bravimani. Stay blessed.’

Leave A Reply

Your email address will not be published.