இனவாதப் போரின் கரு அலைகள் நீங்கி ஒளி மிகுந்த வாழ்வு உதயமாகட்டும்.

0

பொங்கல் என்பது தமிழர்களின் பண்பாட்டையும் மாண்பையும் எடுத்துரைக்கும் ஓர் உன்னத நாளாகும். உழைப்பையும் பிற உயிர்களையும் நேசிக்கும் ஒரு அற்புத இயல்பை தமிழ் சமூகம் கொண்டமையின் வெளிப்பாடாகும். 

உழைப்பையும் இயற்கையும் அதற்கு துணைபுரிந்த மனிதர்கள் மற்றும் பிராணிகளுடன் அன்பை பகிர்ந்து பண்டிகைக்கும் கொண்டாட்டத்திற்கும் உண்மை அர்த்தம் புலப்படுத்தல் இந் நாளின் மகத்துவம் என்பேன். 

இந் நாளில் அன்பையும் பண்பையும் பகிர்ந்து இனிய வாழ்வின் அற்புதத்தை உணர்த்து இப் பூமியையும் இப் பூமிவாழ் உயிர்களையும் மாண்பையும் நேசிப்போம். வாழ்வினதும் உழைப்பினதும் உன்னதம் அறிந்து வாழ்வோம். 

ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை சூழ்ந்த இனவாதப் போரின் கரு அலைகள் நீங்கி ஒளி மிகுந்த வாழ்வு உதயமாகட்டும். தையின் முதல் நாளில் இருந்து எம் தலைவிதி காக்கும் பயணத்தில் பணியில் மாவீரர்களை மனதிருத்தி உறுதியுடன் செல்வோம். 

ஆசிரியர்

Leave A Reply

Your email address will not be published.