தீபச்செல்வனின் பயங்கரவாதி பற்றி இந்து பத்திரிகையில் வெளியான செய்தி

0

ஈழத்து இளந்தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் தீபச்செல்வன். இவரது ‘நடுகல்’ நாவல் (2018) சிங்களத்திலும் வெளியாகியிருக்கிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

தீபச்செல்வனின் அடுத்த நாவல் ‘பயங்கரவாதி’ டிஸ்கவரி புக் பேலஸால் வெளியிடப்பட்டிருக்கிறது. ராணுவம் சூழ்ந்த நகரத்தில், துப்பாக்கிகளுக்கு இடையில் இருந்துகொண்டு இந்த நாவலை எழுதியதாகக் கூறுகிறார் தீபச்செல்வன்.

இன அழிப்பில் தப்பும் ஒரு சிறுவன் கல்லூரி சென்று அங்கே ராணுவத்துக்கு எதிராகக் களத்தில் மேற்கொள்ளும் போராட்டம்தான் ‘பயங்கரவாதி’ நாவலின் கதை. இந்த நாவல் குறித்து இப்போதே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

நன்றி – தமிழ் இந்து

Leave A Reply

Your email address will not be published.