10 ரூபாய் நாணயங்கள் கொடுத்து கார் வாங்கிய தமிழக வைத்தியர்

0

இந்தியாவில் வைத்தியர் ஒருவர் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து  6 இலட்சம் ரூபாய்க்கு (ரூபாய் 28 இலட்சம் இலங்கை மதிப்பில்)  புதிய கார் வாங்கியுள்ளார்.

மக்களிடையே, 10 ரூபாய் நாணயம் செல்லும் என விழிப்புணர்வு ஏற்படுத்த குறித்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் சில பகுதிகளில், 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற மனநிலை, மக்களிடம் நிலவும் நிலையில், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினார்.

அதற்காக, 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து கார் வாங்க திட்டமிட்டார். பல்வேறு பகுதிகளுக்கு சென்று, 6 இலட்சம் ரூபாய்க்கு, 10 ரூபாய் நாணயங்களாக சேகரித்து, மூட்டை மூட்டையாக கட்டி வைத்தார்.

நேற்று கார் வாங்க, சேலம், ஐந்து ரோடு அருகே உள்ள கார் விற்பனையகத்திற்கு சென்று அவர், 10 ரூபாய் நாணயங்களாக, 6 இலட்சம் ரூபாய் கொடுத்து,  காரை வாங்கியுள்ளார்.

மழலையர் பாடசாலையில், 10 ரூபாய் நாணயங்களை வைத்து குழந்தைகள் விளையாடினர். இது குறித்து, அவர்களது பெற்றோரிடம் கேட்டால், நாணயங்கள் செல்லாது என்பதால் விளையாட கொடுத்ததாக தெரிவித்தனர்.

ஆனால், ரிசர்வ் வங்கி, அந்த நாணயம் செல்லாது என, அறிவிக்கவில்லை. இருப்பினும், சில வங்கிகளில், ’10 ரூபாய் நாணயங்களை வாங்க மாட்டோம்’ என, நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனால், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன்.

ஒரு மாதமாக, 10 ரூபாய் நாணயங்களாக, 6 இலட்சம் ரூபாய் சேகரித்தேன். ஒரு மூட்டையில், 20 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வீதம், 15க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கட்டி எடுத்து வந்தேன். அதன் எடை, 480 கிலோ இருந்தது. அந்த நாணயங்களை கொடுத்து கார் வாங்கினேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.