பிரிட்டன் குட்டி இளவரசரின் பெயரை அன்றைய தினம் பிறந்த ஒட்டகத்திற்கு வனவிலங்கு காப்பகம் சூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் கேம்பிரிட்ஜ் இளவரசி கேத்தரின் திங்கள்கிழமை, மத்திய லண்டனில் லிண்டோ விங் ஆஃப் செயின்ட் மேரிஸ் மருத்துவனையில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
இக்குழந்தை அரசி இரண்டாம் எலிசபெத்தின் ஆறாவது கொள்ளுப் பெயரப் பிள்ளை ஆகும். இந்த ஆண் குழந்தை பிரிட்டிஷ் அரியணைக்கான வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும். இக்குழந்தை வில்லியம் -கேட் தம்பதியினருக்கு பிறந்த மூன்றாவது குழந்தை ஆகும்.
இந்நிலையில் இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியரின் 3வது குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை ஹிஸ் ராயல் ஹைனஸ் பிரின்ஸ் லூயிஸ் ஆப் கேம்பிரிட்ஜ் என்ற அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் பிளாக்புல் வனவிலங்கு காப்பகத்தில் அதே நாளில், அதே நேரத்தில் பிறந்த ஒட்டகத்திற்கும், லூயிஸ் என வனவிலங்கு காப்பகம் பெயரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.