தென்கொரியா நேரத்தை பின்பற்ற வட கொரியா முடிவு

0

பியாங்யாங்:

வடகொரியா அதிபரும் தென்கொரிய அதிபரும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சந்தித்தனர். இதனால் 60 ஆண்டாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலேயே இதற்கான சுவடுகள் தெரிந்தது.
இந்த சந்திப்பால் இரண்டு நாடுகளுக்கும் இருந்த பிரச்னை மொத்தமாக முடிவிற்கு வந்துள்ளது. 2015ல் வடகொரியா தென்கொரியாவிற்கு எதிராக களமிறங்கியது. அவர்களிடம் இருந்து முழுவதுமாக வேறுபட ஆசைப்பட்டு, தென் கொரியா பின்பற்றும் நேரத்தை விட 30 நிமிடம் குறைவான நேரத்தை பயன்படுத்தியது.

தென்கொரியாவில் மணி 9 என்றால், வடகொரியாவில் நேரம் 8:30ஆக இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன் வடகொரியாவும், தென்கொரியாவும் மீண்டும் அரசியல் ரீதியாக ஒன்று சேர்ந்துள்ளது. இரு நாட்டு அதிபர்களும் சந்தித்த அறையில் இரண்டு கடிகாரம் இருந்துள்ளது. இந்த இரண்டில் ஒன்றில் வடகொரியா நேரமும், மற்றொன்றில் தென்கொரிய நேரமும் இருந்துள்ளது. இதை பார்த்து இரண்டு தலைவர்களும் வருந்தியுள்ளனர்.

இதையடுத்து, கிம் ஜாங் வடகொரியா நேரத்தை மீண்டும் அரை மணி நேரம் அதிகமாக்க போவதாக அறிவித்தார். அதோடு நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, அரை மணிநேரம் அதிகமாகி உள்ளது. எல்லா மக்களும் அரை மணி நேரத்தை அதிகப்படுத்தி, மீண்டும் தென்கொரியாவோடு ஒன்றிணைந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.