நந்திக்கடல் பகுதியில் மர்ம ஒளி நடமாட்டம் – பொலிஸார் ரோந்து நடவடிக்கையில்!

0

நந்திக்கடல் பகுதியில் மர்ம ஒளி நடமாட்டம் தென்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்பவரை கண்காணித்து கைது செய்வதற்காக இன்று இரவு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது இது அவதானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நந்திக்கடல் எதிர்க்கரையோரப்பகுதியில் அமைந்துள்ள கேப்பாப்புலவு இராணுவ முகாமில் இருந்து வெளிப்படும் மின் ஒளி கடல் நீரில் பட்டு தெறிப்படைவதனால் இவ்வாறான காட்சி தோன்றி இருக்கக்கூடும் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த ஒளித்தொடர் நேரடியாக கண்களுக்கு புலப்படவில்லை என்றும் புகைப்பட கருவியினூடாகவே இது தெரிவதாக குறிப்பிட்டுள்ளனர்.

நந்திக்கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழிலை தடுப்பதற்காக அந்தப்பகுதியில் புகைப்படக்கருவி மற்றும் இரவுபார்வை சாதனங்களுடன் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.