வவுனியா ஓயார் சின்னக்குளம் நான்காம் ஒழுங்ககையில் விவசாயி ஒருவரின் காணியிலிருந்து வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விவசாயி தனது காணியில் விவசாயம் செய்வதற்காக மண்ணைப் பன்படுத்தும் போதே குறித்த வெடிபொருளை கண்டு பிடித்து 119 பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த வவுனியா பொலிசார் வெடிபொருளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த காணி முழுவரும் தேடுதல் வேட்டையிலும் இறங்கியுள்ளனர். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் குறித்த காணியில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.