2630 பேர் திடீர் சுற்றிவளைப்பில் கைது!

0

நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே 2630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சுற்றிவளைப்பில்  குடிபோதையில் வாகனம் செலுத்திய 270 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 938 பேரும்,சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த இருவரும், வேறு பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 733 பேரும்,சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வேறு மோசடிகளுடன் தொடர்புடைய 54 பேரும், ஹெரோய்ன் மற்றும் வேறு விதமான போதைவஸ்துக்களை வைத்திருந்த 633 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 8276 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.