அண்மையில் திருமணம் செய்ய பெண் பார்ப்பதாக கூறி நடிகர் ஆர்யா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்திய நிகழ்ச்சி பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது. டி.ஆர்.பி- க்காக இப்படி செய்கின்றாரா? இல்லை விமர்சனங்களுக்காகவும், புகழ் தேடவும் இவ்விதம் நடத்தப்படுகின்றதா என பலரும் ஆர்யாவை வஞ்சித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் பிறந்த நாளைமுன்னிட்டு நடிகர் ஆர்யா கஜினிகாந்த் என்ற தனது படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.
இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக வனமகன் படத்தில் அறிமுகமான நடிகை சாய்ஷா சைகல் நடித்துள்ளார். மேலும் இவர்களோடு காமெடி நடிகர்கள் சதிஷ்,மொட்ட ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றது விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.