அன்று கொத்து குண்டுகளை பொழிந்து கொன்றுவிட்டு இன்று குளிர்பானம் கொடுத்து நாடகமாடிய இராணுவம்

0

இன்றையதினம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப்படுகொலை நாளான மே 18 இணை தாயக மக்கள் மிகுந்த உணர்வெளிச்சியுடன் அனுஷ்டித்தனர் .

தமிழர் தாயகத்தின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்தினை நோக்கி படையெடுத்தனர் .

2009 இறுதி போரில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முள்ளிவாய்க்காலுக்கு சென்ற மக்களுக்கு இலங்கை இராணுவம் குளிர்பானம் கொடுத்து குளிர்விக்க முயற்சி செய்துள்ளது .

அன்று 2009 இல் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகள், தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி குழந்தைகள் , சிறுவர்கள் , கர்ப்பிணி பெண்கள் என்ற பாகுபாடின்றி ஈவிரக்கம் அற்ற முறையில் அனைவரையும் கொன்று இலங்கை இராணுவம் தமிழ் இன அழைப்பினை மேற்கொண்டு வெறிச்செயல் புரிந்தது.

உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் சில பிரதேசங்களை அறிவித்து விட்டு அந்த பிரதேசங்களுக்கு மக்களை வரும் படி கூறிவிட்டு வேண்டும் என்றே அந்த பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல்கள் மற்றும் விமான தாக்குதல்களை மேற்கொண்டு எமது மக்களை இலங்கை அரசு கொன்று குவித்தது .

இறுதி போரில் ஒன்றரை இலட்சம் வரையிலான மக்கள் இறந்த போதிலும் வெறும் 7000 மக்கள் மாத்திரமே இறந்தார்கள் என்று இலங்கை அரசு இருட்டடிப்பு செய்தது.

இலங்கையில் இடம்பெற்றது இனஅழிப்பு தான் என்று பிரித்தானியா உள்ளிட்ட பல உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இளங்களில் இன அழிப்பு இடம்பெறவில்லை என்றும் இலங்கை இராணுவம் போர்குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்து வருகின்றது .

அன்று அனைத்தையும் செய்து விட்டு இன்று மக்களுக்கு குளிர்பானம் கொடுத்த இலங்கை இராணுவத்தினரின் நடவடிக்கை வேடிக்கைக்கு உரியது .இலங்கையில் இப்போது நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாடுகளுக்கு காட்டி போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து இராணுவத்தினரை காப்பாற்றும் முயற்சியாகவே இராணுவம் குளிர்பானம் கொடுத்து நாடகமாடியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

– ஜெயமதன் –

Leave A Reply

Your email address will not be published.