அபிவிருத்திதான் எமது இலக்கு என்றால் இலட்சோப தமிழர்களை இழந்திருக்கதேவையில்லை.

0

பா.அரியநேத்திரன்,மு.பா.உ

தந்தை செல்வா தொடங்கிய அகிம்சை போராட்டத்தை இலங்கை அரச தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால்தான் தலைவர் பிரபாகரனால் ஆயுதப்போராட்டமாக முப்பது வருடங்கள் பல தியாகங்களால் முன்எடுக்கப்பட்டு வெற்றியின் விழிம்பில் இருக்கும்போதுதான் இருபத்தி இரண்டு உலக நாடுகளின் சதிவலையால் முள்ளிவாய்க்காலில் அந்த உன்னத தியாகம் மௌனித்தது என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன்.
தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் நாவலர் சமூக மேப்பாட்டு அமைப்பினால் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா இன்று 20/05/2018 இடம்பெற்றது அதில் அதிதியாக கலந்து கொண்டு மேலும் உரையாற்றிய பா.அரியநேத்திரன்.

தியாகிகள் சாகலாம் தியாகம் சாகாது அந்த உன்னத தியாகம் வீண்போகாது என்றோ ஒருநாள் அந்த தியாகத்துக்கான தீர்வு கிடைத்தே ஆகும்.அபிவிருத்தி மட்டுமே எமது இலக்கு என்றால் இலட்சக்கணக்கான தமிழ்மக்களை நாம் இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை தந்தை செல்வாவின் அகிம்சைப்போராட்டம் தலைவர் பிரபாகரனின் ஆயுதப்போராட்டத்தின் வளர்சி தற்போது சம்பந்தன் ஐயா தலைமையில் இராஜதந்திர போராட்டமாக மாறியுள்ளது தற்போது அனைத்துலக ரீதியா வடகிழக்கு மக்களுக்கான அரசியல்தீர்வு சர்வதேச விசாரணை என்பன பேசும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது தற்போது சர்வதேசத்தின் மனச்சாட்சிகளை வென்றெடுத்து எமக்கான அரசியல் தீர்வைபெற இலங்கை அரசை வலியுறுத்தும் செயல்பாடுகள் நடந்தாலும் தற்போது நல்லாட்சி என தம்பட்டம் அடிக்கும் மைத்திரி அரசின் செயல்பாடுகளும் கடந்த இரண்டரை வருடங்களாக எமக்கான எந்த தீர்வையும் பெற்றுத்தரவில்லை ஆனால் சர்வதேசம் இதனை புரிந்துகொண்டு இலங்கை அரசை வற்புறுத்தக்கூடிய செயல்பாடுகளை தமிழ்தேசியகூட்டமைப்பு தற்போது மேற்கொண்டுவருகின்றார்கள் என்பதை எல்லோரும் விழங்கிக்கொள்ள வேண்டும்.

எமக்கான தீர்வுக்காக தொடர்ந்தும் பல வழிகளிலும் உள்நாட்டிலும் இராஜதந்திர ரீதியாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பை வடகிழக்கு தமிழ் மக்கள் தொடர்த்தும் பலப்படுத்த வேண்டும்
கடந்த 2015ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் எமது பட்டிருப்பு தொகுதி மக்கள் விட்ட தீர்க்க தரிசனம் இல்லாத குறுகிய மனோநிலையின் தவறு காரணமாக தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்பு தொகுதியில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லாத தொகுதியாக கவனிப்பார் அற்ற வெற்றிடம் உள்ள தொகுதியாக இலங்கையில் இன்று பட்டிருப்பு தொகுதி மட்டுமே உள்ளது.நான் இரண்டுதடவைகள் பதினொரு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன் அப்போது மகிந்த ராஜபக்ச கெடுபிடிகள் அச்சுறுத்தல்கள் மத்தியில் துணிந்து தமிழ்தேசியத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் தழைக்கவைத்தேன் எனது பாராளுமன்ற காலத்தில் ஒருவருடம் ஐம்பது இலட்சம் மட்டுமே எமக்காக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி அதனைக்கொண்டு பாரபட்சம் இன்றி முடிந்தவற்றை செய்தேன் இந்த தும்பங்கேணி பகுதிக்கும் சிலவற்றை செய்தேன் ஆனால் 2015ல் கெடுபிடி அச்சுறுத்தல் அற்ற காலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நானும் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் என்னை நீங்கள் தெரிவுசெய்ய வில்லை என்னை தெரிவு செய்யாவிட்டாலும் பறவாய் இல்லை பட்டிருப்பு தொகுதியில் இருந்து வேறு யாரையாவது தெரிவு செய்யாமல் விட்ட தவறு பட்டிருப்பு தொகுதி மக்கள் விட்ட பாரிய தவறு என்பதை கூறிவைக்கவிரும்புகிறேன்.

எதிர்வரும் காலங்களில் இந்த மடத்தனமான தவறைவிடாமல் சிந்தித்து பிரதேசம் தொகுதி என்பவற்றின் பிரதிநித்துவத்தை உறுதி செய்யக்கூடியவகையிலும் அதேவேளை தமிழ்தேசியத்தை உறுதியுடன் நிலைநாட்டும் வகையிலும் அனைத்து மக்களும் வாக்களிக்கவேண்டும்.இந்த வருடம் முடிவதற்குள் அல்லது அடுத்த 2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அளவில் கிழக்குமாகாணசபை தேர்தல் நடைபெறக்கூடும் அந்த தேர்தலில் தமிழ்மக்கள் அனைவரும் வாக்குகளை சிதறடிக்காமல் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மட்டும் வாக்களித்து கிழக்குமாகாண ஆட்சி அதிகாரங்களை தக்கவைக்கவேண்டும்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் கலப்புமுறை தேர்தல் காரணமாக வட்டாரங்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் உறுப்பினர்களாக அதிஷ்டலாபச்சீட்டில் பரிசு கிடைப்பது போன்று உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர் ஆனால் இந்த உள்ளூராட்சி தேர்தல் பழைய முறையில் விகிதாசார தேர்தலாக நடைபெற்று இருந்தால் தமிழ்தேசிய கூட்டமைப்புத்தான் வடகிழக்கு பிரதேசங்களில் அறுதிப்பெரும் பான்மையுடன் ஆட்சியை அதிகாரங்களை கைப்பற்றி இருப்போம் இதுதான் உண்மை எதிர்வரும் காலங்களில் எவ்வாறான முறையில் தேர்தல் நடைபெற்றாலும் தமிழ்மக்கள் ஒன்றிணைந்து உரிமையையும் அபிவிருத்தியையும் சமாத்திரமாக முன்எடுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தும் விதமாக மக்கள் வாக்களிக்கவேண்டும் எமது மண்ணில் பல உயிர் இழப்புக்கள் ஒப்பற்ற தியாகங்கள் நடந்தமண் குறிப்பாக படுவான்கரை பெரும் நிலம் கடந்தகால ஆயுப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாவீரர்கள் உயிர் தியாகம் செய்த பிரதேசம் அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு எமக்கு உள்ளது அந்த தியாகிகளின் இலட்சியம் வீண்போகாத வகையில் எமது அரசியல் பணியை செய்யக்கூடியவகையில் ஜனநாயக ரீதியாக செயல்படும் தமிழ்தேசிய கூட்டமை பலப்படுத்துவதே காலத்தின்தேவை.

சிலர் பிரதேசவாத கருத்துக்களை முன்வைத்து எமது ஒற்றுமையை சிதறடித்து வாக்குகளை சிதறடித்து அபிவிருத்திமட்டுமே எமக்குதேவை என்ற பரப்புரைகளை முன்எடுத்து தமிழ்தேசியசிந்தனையை மழுங்கடித்து பேரினவாத சிந்தனையை விதைக்க முற்படுவதை காணமுடிகிறது இது எதிர்காலத்தில் எமது இனத்தின் இருப்பை மாற்று சக்திகளுக்கு தாரைவார்த்துக்கொடுக்கும் கைங்கரியம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். தமிழ்பாரம்பரியத்தை கட்டிக்காப்பதற்காக இவ்வாறான பாரம்பரிய விளையாட்டு விழா கலைவிழா என்பவற்றை ஊர் ஊராக பல விளையாட்டுக்கழகங்கள் முன்எடுப்பதை பாராட்டவேண்டும் ஆனால் தமிழர் பாரப்பரிய பண்பாடுகளை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டுமானால் தமிழர் பாரம்பரி பண்பாடுகளை கட்டிக்காக்க கூடிய தமிழ்தேசிய அரசியலையும் பலப்படுத்த இளைஞர்கள் முன்வரவேண்டும் எனவும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.