தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமையானது தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்முன் கூறிய வாக்குறுதிகளை மறந்துள்ளமையினை எடுத்துக் காட்டுகின்றது என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அவ் அமைப்பினர் மேலும் தெரிவித்திருப்பதாவது,,
தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது அரசியல் கைதிகள் விடயத்திற்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குறுதிகள் வழங்கியது . ஆனால் இதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
அரசாங்கம் தெற்கிற்கு ஒரு நீதியையும் வடக்கிற்கு மற்றுமோர் நீதியையும் முன்னிலைப்படுத்தி நிர்வாகத்தினை மேற்கொண்டு வருகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லை என அரசாங்க தரப்பினர் பகிரங்கமாக கூறியுள்ளமையானது மர்மம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு இதுவரை காலமும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் இன்று உயிருடன் இருக்கின்றார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
