இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள, இலங்கை குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் அமைதிப் போராட்டம் ஒன்று நாளை நடத்தப்படவுள்ளது.
பிராந்திய ஏதிலி வலைப்பின்னல் குழுவொன்றினால் பென்டிகோவில் (Bendigo) உள்ள ஹாக்ரேப்ஸ் மால் (hargreaves Mall) இற்கு முன்னால் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பிராந்திய ஏதிலி வலைப்பின்னல் குழுவொன்றினால் பென்டிகோவில் (Bendigo) உள்ள ஹாக்ரேப்ஸ் மால் (hargreaves Mall) இற்கு முன்னால் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த குடும்பம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்திருந்தது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவு அனுமதி கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிலையில் அவர்களை மீள இலங்கைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த பிரதேசத்தில் உள்ள 96 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் கைச்சாத்திட்டு மனு ஒன்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.