இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதல் நான்கு இடத்தை பிடிக்க போகும் அணிகள் எவை..

0

டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இந்த சீசனில் 33 ஆட்டங்கள் இதுவரை முடிந்துள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் விளையாடும். அதற்கடுத்து எலிமினேட்டர் சுற்றில் 3 மற்றும் 4வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் விளையாடும்.

முதல் தகுதிச் சுற்றில் தோற்கும் அணியும் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியும் இரண்டாவது தகுதிச் சுற்றில் விளையாடும். இரண்டு தகுதிச் சுற்றிலும் வெற்றி பெறும் அணிகள் பைனல்ஸில் விளையாடும். தற்போதைய நிலையில் புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் பெரிய அளவில் பிரச்னை இருக்காது.

அதே நேரத்தில் கொல்கத்தா அணி மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது. பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளும் முட்டி மோதுகின்றன. ராஜஸ்தான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இமாலய சவால் உள்ளன. இருந்தாலும் அவை, எந்த அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதை நிர்ணயிக்கக் கூடிய நிலையில் உள்ளது.

EElamNews
EElamNews

ஹைதராபாத், சிஎஸ்கேவுக்கு சுலபம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் 6ல் வென்று 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்துள்ள 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு சுலபமாக முன்னேறிவிடும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதே நிலையில் உள்ளது. ஆனால் அந்த அணி 6 ஆட்டங்களில் 2ல் வென்றால் போதும். ஆனால் இவ்விரு அணிகளும் முதலிடத்தைப் பிடிக்கும் போட்டியில் உள்ளன.

EElamNews
EElamNews

அஸ்வின் அணிக்கு வாய்ப்பு

அஸ்வின் கேப்டனாக உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப், இந்த சீசனில் மிகவும் ஆச்சரியமூட்டும் அணியாக உள்ளது. இதுவரை 7ல் 5ல் வென்றுள்ளது. மீதமுள்ள 7ல் 3ல் வென்றாலே பிளே ஆப் சுற்று நிச்சயம். தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொலகத்தா நைட் ரைடர்ஸ் அணி 9ல் 5ல் வென்றுள்ளது. மீதமுள்ள 5ல் நான்கில் வென்றாலே பிளே ஆப் சுற்று கன்பர்ம் ஆகிவிடும்.

 

EElamNews
EElamNews

பெங்களூர், டெல்லிக்கு சிரமம்

விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8ல் 3ல் வென்றுள்ளது. மீதமுள்ள 6ல் 5ல் வென்றால்தான் பிளே ஆப் கனவு பலிக்கும். இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி திடீர் எழுச்சி பெற்று 9ல் 3ல் வென்றுள்ளது. அடுத்து விளையாடும் 5 ஆட்டங்களிலும் வென்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற முடியும்.

EElamNews
EElamNews

2015 ரிப்பீட்டு ஆகுமா

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 8ல் 2ல் மட்டுமே வென்று கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள 6 ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் சுற்று சாத்தியம். 2015லும் இதுபோல் கடைசி இடத்தில் இருந்து முன்னேறி கோப்பையை வென்றது. அஜிங்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8ல் 3ல் வென்றுள்ளது. மீதமுள்ள 6ல் 5ல் வென்றால் பிளே ஆப் வாய்ப்பு உள்ளது.

தற்போதைய நிலையில் சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகளுக்கு கிட்டத்தட்ட ரூட் கிளியர். பஞ்சாப் அணி ஆர்ஏசியில் உள்ளது. அடுத்தடுத்த ஆட்டங்களின் முடிவுகளில்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போகும் அணிகள் எவை என்பது நிச்சயமாகும்.

Leave A Reply

Your email address will not be published.