மே 18 தமிழின படுகொலை நாளான இன்று முள்ளிவாய்க்காலில் இறந்த உறவுகளை மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்தார்கள்.
2009 இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினால் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதங்கள் மூலம் சுமார் ஒன்றரை இலட்சம் வரையிலான மக்கள் மடுகொலை செய்யப்பட்டார்கள் .
இலங்கை இராணுவத்தினால் அநியாயமாக கொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைத்து மக்கள் கதறி அழுதனர் .இதன் காரணமாக முள்ளிவாய்க்கால் பிரதேசம் சோகமயமானதாக காணப்பட்டது .
இன்று காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் ஈகை சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அராம்பித்து வைத்தார் .
தமிழர் தாயக பகுதிகள் அனைத்திலும் இருந்து மக்கள் உணர்வுபூர்வமாக திரண்டு வந்து சுடர் ஏற்றி தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள்.அத்துடன் மத தலைவர்களின் ஆத்ம சாந்தி வழிபாடுகளும் இடம்பெற்று இருந்தது .
யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் போர்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது இதுவரை எந்த விதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை .
போர்குற்றத்தில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச உட்பட சிங்கள இராணுவ காடைகள் அனைவருக்கும் என்றைக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகின்றதோ அன்றைக்குத்தான் இறந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தி அடையும்.
அற்ப சொற்ப சலுகைகளுக்கவும் பதவி ஆசைக்காகவும் பேரினவாதிகளுடன் கைகோர்த்து பேரினவாதிகளின் கைப்பொம்மையாக திகழ்ந்து எமது உரிமைகளை பேரினவாதிகளிடம் அடகு வைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறியழுத மக்களின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.