கோத்தபாயவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க அரசு

0

ஸ்ரீலங்கா, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கையை அமெரிக்க அரசு நிராகரித்துள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்கக் குடியுரிமை கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையில் இருந்து விலகிக் கொள்ளும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார்.
அமெரிக்கக் குடியேற்ற மற்றும் தேசிய சட்டத்தின் கீழ் உள்ள சில சிறப்பு விதிகளின் கீழ் கோத்தபாயவின் குடியுரிமையை நீக்க முடியாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு அமைய இரட்டைக் குடியுரிமை கொண்டவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் நோக்குடனே கோத்தபாய அமெரிக்கக் குடியுரிமையில் இருந்து விலகிக் கொள்ளும் தீர்மானத்தை எடுத்திருந்தார் என்று கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.