முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் 18.05.18 அன்று இரவு மண்ஏற்றி சென்ற டிப்பர் பிரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில். முள்ளிவளைப்பகுதியில் இருந்து வுனியா நோக்கி மண் ஏற்றி சென்ற டிப்பர் ஒன்று களிக்காட்டுப்பகுதியில் வீதியில் குறுக்கே நின்ற மாடு ஒன்றின் மோதவிடாமல் விலகிசெல்ல முற்றபட்ட போது டிப்பர் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது இதில் பயணித்த சாரதி டிப்பரில் இருந்த மண் கொட்டப்பட்டு மூடப்பட்டு மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த சாரதியின் உடலினை மீட்டுள்ளதுடன் காயமடைந்த உதவியாளரையும் மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியான வவுனியா கல்மடு பகுதியினை சேர்ந்த 28 அகவையுடைய விவேகானந்தராசா றொபின்சன் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் 24 அகவையுடைய கூழாமுறிப்பினை சேர்ந்த செல்வக்குமார் தர்சன் என்ற இளைஞன் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
உயிரிழந்தவரின் உடலம் மருத்துவமனையில் பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.