தமிழர் உயிரை எடுத்து குடும்பங்களை சிதைக்கும் நுண்கடன்கள்!

0

எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும், சமூக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருப்பதாக காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.

இதனால் காரைதீவுக்குள் தமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்க முடியாது என அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நுண்கடன்கள் ஏழைகளின் குரல்வளையை நெரிக்கின்ற கருவிகளாக செயற்படுவதை இன்னமும் அனுமதிக்க முடியாது. குடும்பம் பிரிவது முதல் தற்கொலை வரை துயரங்கள் தொடர்கின்றன. அவரவர் கொள்ளளவிற்கு ஏற்ப நுண்கடனை வழங்கவேண்டும். கடன்பெற்றவர்கள் திரும்ப செலுத்தக் கூடியவர்களா என்பதை பரிசீலனை செய்த பின்பே கடன் வழங்க வேண்டும்.

ஒருநாள் கடன், ஒருவார கடன், ஒருமாத கடன் என பலவகையான நுண்கடன்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றது. சிலவேளை இது மதமாற்றும் கருவியாக பாலியல் இலஞ்சம் கோரும் துரும்பாக பயன்படுத்தப்படுவதை காண்கின்றோம். இதனை ஒருசீரான நிலைக்குக் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.