முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் நாடெங்கிலும் நடந்தேறியிருந்தாலும்,மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு ஒரே குடையின் கீழ் அண்ணன் சீமானும் அவர் தம்பிகளாலும் மிக உணர்வுபூர்வமாக நடாத்திய இனவெழுச்சி நிகழ்வு தனித்தவமானதாக நோக்கப்பட வேண்டியது.
புலம்பெயர் அமைப்புகளும் ஈழத்தின் அரசியல்வாதிகளும் யார் பெரிது என்றும் யார் தலைமையில் கூடுவது என்றும் தலையற்றவர்களாய் தடம்புரண்டாலும்,ஓரணியில் தமிழ் இனத்தை இணைத்த அண்ணன் சீமான் தனித்துவமாக பிரகாசிக்கின்றார்.
“புலிக்கொடியை பிடிச்சால் வெள்ளைக்காரன் பயங்கரவாதி எண்டு சொல்லுவான்”என்று பிதற்றும் ஒரு சில சிங்களத்தின் அடிவருடி புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில்,புலிக்கொடியை காப்பாற்றி,தமிழர் மரபைக்காப்பாற்றி,எங்கள் தலைவரது எண்ணங்களைக்காப்பாற்றி,எங்கள் தலைவரையே தலைவராக ஏற்று எங்கள் போராளிகளுக்கு நிகராக ஆயுதம் ஏந்தாத களப்போராளிகளாக நிற்கும் சீமான் அண்ணனும் அவர் தம்பிகளும் ஈழத்தின் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றார்கள் என்பதில் மாற்றுக்கருத்தக்கு இடமில்லை.
பிரியன்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
