தலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்!: பழ.நெடுமாறன் உறுதி!!

0

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதில் தனக்கு மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் மிக நெருக்கமானவர் பழநெடுமாறன். ஈழத்தில் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தராக இருந்த நெடுமாறன் அக் கட்சியை விட்டு விலகி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் மிக நெருக்கமானார். இந்திய அளவில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய சில முக்கிய நகர்வுகளையும் இவர் மேற்கொண்டார். தமிழீழ தேசிய தலைவருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இவர் மதிப்பு பெற்றார். இந்த நிலையில் 2009 போர் மௌனிக்கப்பட்ட காலம் தொடக்கம் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறி வந்த பழ நெடுமாறன் அண்மையில் கொழும்பு நாளிதழுக்கு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மீண்டும் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்தவை..

“சரி, பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள்.

அதற்கான அவசியம் என்ன? வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது.

அப்பாவி மக்கள் இருக்கின்றபோது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும்? பொதுமக்களை பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியம் என்ன? பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக உடலொன்றை காண்பித்தார்கள்.

உண்மையில் அவருடைய உடலாக இருந்திருந்தால் ராஜபக்ச அரசாங்கம் அதனை கொழும்பிற்கு கொண்டு வந்து சர்வதேச ஊடகங்களுக்கு காண்பித்திருப்பாரா இல்லையா? அதனை ஏன் செய்யவில்லை.

அதற்கு அடுத்ததாக மரபணுப்பரிசோதனை (டி.என்.ஏ) சோதனை செய்தாக கூறினார்கள். பிரபாகரன் இறந்த தருணத்தில் அவருடைய பெற்றோர்கள் வல்வெட்டித்துறையில் தான் இருந்தார்கள்.

அப்படியென்றால் அவர்களுடைய இரத்தமாதிரி பெறப்பட்டு சோதனை மேற்கொண்டிருக்க வேண்டுமல்லவா?

ராஜீவ் உடலத்தினை அடையாளப்படுத்திய வைத்தியநிபுணர் சந்திரசேகரனிடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக கேட்போது, “டி.என்.ஏ.சோதனை நடத்தும் வசதியே இலங்கையில் இல்லை.

அவ்வாறான சோதனைகள் சென்னையில் தான் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியாக கூறுகின்றார். இதனை விட ராஜபக்ச காண்பித்த உடல் பிரபாகரனின் உடல் அல்ல என்பதற்கு வேறு என்ன ஆதராம் தேவையாகவுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.