தாயகப் பகுதிகளில் முடக்கப்படும் ஆபத்தில் HNB வங்கி!

ஈழம்நியூஸ் முன்கூட்டியே எச்சரித்தது!!

0

ஒன்பது வருடங்களுக்கு முன்னதாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டயுத்தத்தின் போது உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூறிய பணியாளர்கள் இருவரை பணிஇடைநிறுத்தம் செய்துள்ள HNB என்று அழைக்கப்படும் ஹற்றன் நெஷனல்வங்கியில் இருக்கும் கணக்குகளை முடித்துக்கொள்ள வடக்கைச் சேர்ந்த தமிழ்வாடிக்கையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வொன்றைகிளிநொச்சியிலுள்ள வங்கி கிளை அலுவலக கட்டடத்திற்கு சக பணியாளர்களுடன் இணைந்துநினைவுகூறிய HNB வங்கியின் கிளிநொச்சிக் கிளையின் உதவி முகாமையாளர் சசிவர்ணன்பரிபூர்ணநந்தசர்மா மற்றும் மற்றுமொரு பணியாளரின் பணிகள்இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஒன்பதாவது நினைவேந்தல்நிகழ்வை நடத்திய HNB வங்கியின் கிளிநொச்சிக் கிளையின் உதவி முகாமையாளர்சசிவர்ணன் பரிபூர்ணநந்தசர்மா உட்பட பணியாளர்கள் இருவரை பணி இடைநிறுத்தம் செய்ததைநியாயப்படுத்தி HNB வங்கியின் தலைமையகம்ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் அறிக்கையொன்றைவெளியிட்டிருந்தது.

அதில் ஸ்ரீலங்கா பிரஜைகளின் கௌரவத்திற்காகஎடுக்கப்பட்ட நடவடிக்கை என்று HNB வங்கியின் நிர்வாகம் அறிவித்திருக்கின்றது,

ஸ்ரீலங்கா பிரஜைகளின் கௌரவத்திற்குஅச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மற்றும் சாதாரண சமூக நிலைப்பாட்டை மீறும் வகையிலானஉணர்வை வெளிப்படுத்துவதற்கோ HNB வங்கி அனுமதிக்க மாட்டோம் என்றும்,இவ்வாறான நிகழ்வுகள் குறித்து அதிக கவனம் செலுத்துவோம் என்றும் HNBவங்கியின் நிர்வாகம் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும்விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 40 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையினாலும் உறுதிப்படுத்தியுள்ள முள்ளிவாய்க்கால்இனப்படுகொலையின் ஒன்பதாவது ஆண்டு நினைவேந்தலை தமிழர் தாயகமான வடக்கு கிழக்குமக்களுடன் இணைந்து நினைவுகூறிய வங்கிப் பணியாளர்கள் இருவரை பணிநீக்கம் செய்துள்ள HNB வங்கியில்வைத்துள்ள கணக்குகளை முடிவுறுத்தப் போவதாக தழிழ் வாடிக்கையாளர்கள் வங்கிக்குஅனுப்பிவைத்துள்ள கடிதங்களையும் கிடைத்துள்ளன.

இதில் மனித உணர்வுகளை மதிக்காத நிறுவனமொன்றுடன் கொடுக்கல்வாங்கல்களை வைத்திருக்க வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை என யாழ்ப்பாண HNB வங்கிகிளை முகாமையாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூறியதற்கு எதிராக நடவடிக்கைஎடுத்துள்ள HNB வங்கி தனது பணியாளர்கள் இருவரை நீக்கியதால், அதன் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளதாகத்தெரிவிக்கும் கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சிங்கரராசா ஜீவநாயகம்,உடனடியாக பணிநீக்கம் செய்த பணியாளர்களை பணியில் அமர்த்துவதன் ஊடாக HNBவங்கி தனது தவறை சரிசெய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதேவேரள HNB வங்கி பணி இடைநிறுத்தம் செய்துள்ளபணியாளர்கள் இருவரையும் உடனடியாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கத் தவறினால்,உள்நாட்டில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் HNBவங்கியுடனான கொடுக்கல் வாங்கல்களை நிறுத்திக்கொள்வார்கள் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துர்ள்ளார்.

இதேவேளை HNB வங்கியில் கணக்குகளை வைத்திருக்கும்தாமும் கடும் வேதனையடைந்துள்ளதாகத் தெரிவிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்தவாடிக்கையாளராக, மயில்வாகனம்கமலகாந்தன் என்பவர் தானும் HNB வங்கியுடனான உறவைமுறித்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான உலகின் முன்னணிசஞ்சிகையான த பேங்கர் சஞ்சிகையினால் 2017 ஆம் ஆண்டு சிறந்த வங்கிக்கான விருதுவழங்கி கைரவிக்கப்பட்ட ஹற்றன் நெஷனல் வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணிரியென்ஷி அரசகுலரத்ன இருக்கின்றார். தமிழர் தாயகம் உட்பட நாடு முழுவதிலும் 251கிளைகளை கொண்டிருக்கம் HNB வங்கி சிறிலங்காவிலுள்ள மிகப்பெரியதனியார் வங்கி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.