தூத்துக்குடியில் கொல்லப்பட்டது புலி! சிங்கள ஊடகத்தின் விந்தைக் கண்டுபிடிப்பு

0

தமிழகத்தின் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட 13 பேரில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

செம்பு உருக்காலையில் இருந்து வெளியாகும் கழிவுகளால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடத்தப்பட்ட போராட்டத்தின் 100வது நாளில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்திருந்தனர்.

இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது பின்னர் தெரியவந்தது. இது தொடர்பாக தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக 1981ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை அடுத்து அவர் குடும்பத்தோடு தமிழகத்திற்கு இடம் பெயர்ந்திருந்தார் என்றும். இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்தார் என்றும் தகவல்களி் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் எனவும் புனர்வாழ்வு பயிற்சிகளின் பின்னர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றவர் எனவும் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அவர் 1981ம் ஆண்டே இலங்கை விட்டு வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.