தூத்துக்குடி கலெக்டர் ஆஃபிசிலிருந்து பிரபல ஆங்கல ஊடக நிரூபர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ

0

எதிர்கட்சி தலைவர்கள் தூத்துக்குடி சம்பவம் என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் எனக் கூறி வரும் நிலையில் பிரபல ஆங்கில ஊடக பத்திரிக்கையாளர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதேவ் என்ற அந்த நிரூபர் பல விஷங்களை நேரடியாக காட்டி பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு எழுப்புகின்றார். அதில் குறிப்பாக கலெக்டர் அலுவலக வாயிலில் இருக்கும் 2 சிசிடிவி கேமராவும் சொல்லி வைத்தார் போன்று தரையை நோக்கி திருப்பப்பட்டுள்ளது.

கேமரா உடைக்கப்படவில்லை அதை யாரும் தாக்கியது போன்றும் தெரியவில்லை. ஆனால் கலெக்டர் அலுவலக நுழை வாயில் கதவிற்கு மேல் உள்ள இரண்டு கேமராவும் தரையை பார்த்து செங்குத்தாக உள்ளது.

அந்த கேமராக்கள் உயரத்தில் இருப்பதால் அதை உடைப்பது என்பது எளிதல்ல எனவும் அவர் கூறுகின்றார். கலெக்டர் அலுவலகத்திற்குள்ளே பொதுமக்கள் புகுந்தார்கள் என்றால் அதன் சிசிடிவி காட்சிகளை காட்டுக் எனக் கேட்கப்படும் போது கேமரா வேலை செய்யவில்லை எனக் கூறுவதற்காகவா அல்லது மெரினாவில் நடந்தது போன்று நடந்தவைகள் சிசிடிவியில் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகவா என்ற கருத்தில் அந்த நிரூபர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிசிடிவி கேமரா தரையை நோக்கி திருப்பப்பட்ட காரணம் என்ன ? இதே அந்த நீபர் எழுப்பும் முக்கிய கேள்வி.

மேலும் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய ஒரே ஒரு வழி மட்டும் தான் உள்ளது. எப்படி இருக்கு அத்தன போலிசை மீறி பொதுமக்கள் எப்படி உள்ளே நுழைந்து வாகனத்தை கொழுத்தியிருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

அவர் இதற்கு மற்றொரு விசயத்தையும் நேரடியாக காட்டி பேசுகின்றார். கலெக்டர் ஆபிசிற்குள் இருந்த வாகனங்கள் கொழுத்தப்பட்டது. அப்படி கொழுத்தப்பட்ட அனைத்து வாகனங்களுமே தீப்பேட்டியை அடிக்க வைத்த மாறி வரிசையாக குப்புற சாய்த்து நிற்க வைக்கப்பட்டுள்ளது.

இதை சுட்டிகாட்டிய நீரூபர் கலவரத்தில் பொதுவாக ஈடுபடுபவர்கள் இப்படி யோசித்து எல்லாம் வண்டியை சாய்த்து கொழுத்தும் பழக்கம் இல்லை. சாய்த்தால் தான் நன்றாக எரியும் என்ற சிந்தனையெல்லாம் அந்த கலவர நேரத்தில் அவர்களுக்கு எழ வாய்ப்பில்லை என்பதையும் நிரூபர் சுட்டிக்காட்டுகின்றார்.

நான் இங்கே இருந்தவர்களிடம் கேட்டேன் பொதுமக்கள் யாரும் இதை செய்யவில்லை எனக் கூறுகின்றார்கள். நான் எந்த பக்கமும் பேசவில்லை நடுநிலையாக கேள்விகளை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு வைக்கின்றேன் பதில் கிடைக்குமா என அவர் அந்த காணொளியை முடிக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.