நஞ்சு குடித்த தந்தை உயிரிழப்பு

பிள்ளைகள் இருவரும் மருத்துவமனையில்!!

0

தன் இரு பிள்­ளை­க­ளுக்கு நச்­சுத் திரா­வ­கம் கொடுத்­துத் தானும் அதை அருந்­திய தந்தை சிகிச்சை பய­னின்றி 6 நாள்­க­ளின் பின்­னர் உயி­ரி­ழந்­தார்.

சாவ­கச்­சேரி, வடக்கு மடத்­த­டி­யைச் சேர்ந்த கந்­த­சாமி சுரேஸ்­கு­மார் (வயது-35) என்­பரே உயி­ரி­ழந்­தார். அவ­ரது பிள்­ளை­கள் தொடர்ந்து சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­ற­னர்.

கடந்த 30ஆம் திகதி இரவு வேலை­யில் இருந்து வீட்­டுக்கு வந்த சுரேஸ்­கு­மார் மென்­பா­னத்­துக்­குள் நச்­சுத் திரா­வ­கத்­தைக் கலந்து இரு பிள்­ளை­க­ளுக்­கும் பரு­கக் கொடுத்­து தானும் நச்­சுத் திரா­வ­கத்தை அருந்­தி­யுள்­ளார்.

அதை அறிந்த அய­ல­வர்­கள் மூவ­ரை­யும் உட­ன­டி­யாக சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­த­னர். அங்கு சிகிச்­சை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு, மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­ட­னர்.

சிகிச்சை பெற்­று­வந்த நிலை­யில் சுரேஸ்­கு­மார் நேற்­று­முன்­தி­னம் இரவு 8 மணி­ய­ள­வில் உயி­ரி­ழந்­தார். இது தொடர்­பாக சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

அவ­ரது பிள்­ளை­க­ளான அறி­வ­ழ­கன் (வயது-11), தருணி (வயது-7) ஆகிய இரு­வ­ரும் தொடர்ந்­தும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

Leave A Reply

Your email address will not be published.