நம்பிக்கையான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ள கனடா பிரதமர்

0

யுத்தத்தில் இறந்தவர்கள் தொடர்பில் நம்பகரமானதும் உண்மையானதுமான பொறுப்புக்கூறல் தொடர்பான செயற்திட்டம் செயற்படுத்தப்படல் வேண்டும் என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளார் .

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நடந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கனடா பிரதமர் இதனை வலியுறுத்தியுள்ளார் .மேலும் இலங்கையில் நிலையானதும் நீதியானதுமான சமாதானம் , மற்றும் இனங்களுக்கு இடையிலான உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்த இலங்கை அரசுக்கு முழுமையான ஆதரவினை வழங்க தயாராக உள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார் .

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கனடா பிரதமர் , “இலங்கையில் இடம்பெற்ற 26 வருடங்களுக்கும் மேலான யுத்தத்தில் பலர் தமது வாழ்க்கையை இழந்துள்ளார்கள்.பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள் .பலர் காயப்பட்டுள்ளார்கள் .பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் . கடந்த ஒன்பது வருடங்களாக, கனடாவில் வசிக்கும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நேரடியாக சந்தித்துள்ளேன் .இலங்கையில் இடம்பெற்ற போர் அவர்களது வாழ்க்கையை எவ்வாறு பாதித்துள்ளது என்று அவர்கள் கூறுவதை கேட்கும் போது நிலையான சமாதானத்தையும் உண்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை நான் உணர்கின்றேன் ” என்று தெரிவித்தார் .

மேலும் , இலங்கையில் இடம்பெற்ற ஆயுத போரில் பாதிக்கப்பட்டு கனடாவில் வசிக்கும் அனைத்து தமிழர்களுக்கும் தனது ஆழந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன் .அத்துடன் இலங்கை தமிழர்கள் கனடா நாட்டிற்கு வழங்கி வரும் முக்கியமான பங்களிப்புகளை கனடா நாட்டு மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

கனடா ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் ஈழத்து தமிழர்களுக்கு தனது முழுமையான ஆதரவினை அன்று தொடக்கம் இன்றுவரை தொடர்ச்சியாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.