நல்லாட்சி அரசுக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்கவுள்ள மருத்துவர்கள்

0

நல்லாட்சி அரசுக்கு எதிராக நாளை மருத்துவர்கள் 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இலங்கை அரசாங்கம் சிங்கபூருடன் மேற்கொண்டுள்ள FTA ஒப்பந்தம் மற்றும் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள ETCA ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் .

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவர் சங்கத்தின் செயலாளர் Haritha Aluthge, அண்மையில் இலங்கை அரசு சிங்கபூருடன் மேற்கொண்டுள்ள FTA ஒப்பந்தம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.ஆனால் இது தொடர்பில் ஜனாதிபதி இதுவரை எமக்கு பதில் அளிக்கவில்லை .ஆகையால் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கவுள்ளதாக தெரிவித்தார் .

நாளை காலை 8 மணிக்கு இந்த வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்க படும் என்று மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது .எனிலும் அவசர சிகிச்சை பிரிவு , கர்ப்பிணி தாய்மார்கள் , சிறுவர்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு என்பன வழமைபோல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

FTA மற்றும் ETCA ஒப்பந்தங்கள் இலங்கை தொழில் சந்தைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் .வெளிநாட்டவர்கள் இலங்கை உள்நாட்டு தொழில் சந்தையில் கால் பதிப்பதினால் எமது நாட்டவர்கள் வேலைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் .ஏற்கனவே பட்டதாரிகள் வேலை இல்லாமல் திண்டாடி வரும் நிலையில் அரசினால் கைச்சாத்திடப்பட்டுள்ள FTA மற்றும் ETCA உடன்படிக்கைகள் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.