வாழ்க்கை என்பது கனவானது…
தனிமை எனது உறவானது….
உயிரும் எனக்கு பாரமானது…
சொந்தங்கள் எல்லாம் தொலைவானது…
நட்புகள் கூட நிலையற்றது…..
ஆறுதல் யாரும் சொல்லிடலாம்…
ஆலோசனையும் தந்திடலாம்…
கூட வருவார் யார் யாரோ…….
போகும் இடம் எது தெரியவில்லை…
போகும் வழியும் புரியவில்லை…
சரியெது தவறெது விளங்கவில்லை…
நான் செய்த குற்றமென்ன பதிலுமில்லை…
என் பாதை எல்லாம் இருள் சூழ்வதேன்…
சூழ்நிலை கைதியாய் நான் ஆவதேன்…
சுற்றி நடப்பது புரியவில்லை…
விதியா சதியா விளங்கவில்லை…
தனியாக பயணம் தொடர்கிறது….
இருள் சூழ்ந்த ஓர் காட்டு வழி…
எதை பார்த்த போதும் பயம் சூழுதே..
என் கால்கள் ஏனோ தடுமாறுதே..
நிஜமா நிழலா தெரியவில்லை…
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
பாதைகள் வேறாய் ஆகிடுமா…
பயணங்கள் இடையில் முடிந்திடுமா…
?✍பிரியா
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.

Prev Post